பதிவு செய்த நாள்
03 செப்2016
03:14
புதுடில்லி : சோனி நிறுவனம், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
மின் சாதனங்கள் தயாரிப்பில், முன்னணியில் உள்ள சோனி நிறுவனத்திற்கு, ஜப்பான், சீனா, மலேஷியா நாடுகளில், சொந்தமாக தொழிற்சாலைகள் உள்ளன. சோனி நிறுவன தயாரிப்புகளுக்கு, இந்திய வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. தற்போது, இந்தியாவில் உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து, சோனி நிறுவனம், ‘டிவி’ உள்ளிட்ட சில சாதனங்களை, ‘அசெம்பிள்’ செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க, சோனி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, சோனி நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், எங்கள் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உள்ள தேவை, வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இங்கு, மென்பொருள் மேம்பாட்டு மையம் அமைக்க உள்ளோம். அதில், 1,500 பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|