எல்.ஐ.சி., பங்­குச்­சந்­தைக்கு வந்தால் மதிப்பு உயரும்: ஜெட்லிஎல்.ஐ.சி., பங்­குச்­சந்­தைக்கு வந்தால் மதிப்பு உயரும்: ஜெட்லி ... விடை பெறு­கிறார் ரகுராம் ராஜன்:ரிசர்வ் வங்­கியின் 23வது ஆளுநர் விடை பெறு­கிறார் ரகுராம் ராஜன்:ரிசர்வ் வங்­கியின் 23வது ஆளுநர் ...
ரசா­யன சந்­தையின் மதிப்பு 4 ஆண்­டு­களில் ரூ.15 லட்சம் கோடி­யாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2016
03:17

புது­டில்லி : ‘இந்­திய ரசா­யன சந்­தையின் மதிப்பு, 2020ல், 15 லட்சம் கோடி ரூபா­யாக உயரும்’ என, டாடா ஸ்ட்ரடஜிக் மேனேஜ்மென்ட் குழு­மத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
இக்­கு­ழுமம், ரசா­ய­னங்கள் துறை குறித்த, ‘இந்­தியா கெம் – 2016’ என்ற ஆய்­வ­றிக்­கையை தயா­ரித்­துள்­ளது. இதை, டில்­லியில் நடை­பெற்ற விழாவில், மத்­திய ரசா­யனம் மற்றும் உரத்­துறை அமைச்சர் அனந்த குமார் வெளி­யிட்டார்.
அறிக்கை விபரம்: இந்­திய ரசா­யன துறையின் சந்தை மதிப்பு, தற்­போது, 14,700 கோடி டாலர், அதா­வது, 9.84 லட்சம் கோடி ரூபா­யாக உள்­ளது. சர்­வ­தேச ரசா­யன சந்­தையில், இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு, மூன்று சத­வீதம் என்­ற­ளவில் உள்­ளது. இந்­தி­யாவில், 80 ஆயி­ரத்­திற்கும் அதி­க­மான ரசா­ய­னங்கள் புழக்­கத்தில் உள்­ளன. மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், ரசா­யன துறையின் பங்­க­ளிப்பு, 15 சத­வீ­த­மாக உள்­ளது. நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு, ரசா­யன துறை முக்­கிய பங்­க­ளிப்பை வழங்கி வரு­கி­றது. இத்­து­றையின் வளர்ச்­சிக்கு, பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.
சிறப்பு வகை ரசா­ய­னங்கள், மருந்து மற்றும் உயிரி தொழில்­நுட்ப துறை­க­ளுக்­கான ரசா­ய­னங்­க­ளுக்கு, அதிக முக்­கி­யத்­துவம் அளிக்க வேண்டும். அரசும், ஒழுங்­கு­முறை அமைப்­பு­களும் இணைந்து செயல்­ப­டும்­பட்­சத்தில், இந்­திய ரசா­யன துறையின் உண்­மை­யான ஆற்றல் வெளிப்­படும். மத்­திய அரசின், ‘இந்­தி­யாவில் தயா­ரிப்போம்’ திட்­டத்­திற்கு வர­வேற்பு பெருகி வரு­கி­றது. இதன் மூலம், ஏரா­ள­மான முத­லீ­டுகள், புது­மை­யான கண்­டு­பி­டிப்­புகள், அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்கள் செயல்­பாட்­டிற்கு வர உள்­ளன. இது, இந்­திய ரசா­யன துறை மேலும் வளர்ச்சி காண துணை புரியும்.
அடுத்த ஆண்டு அறி­மு­க­மாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி, ரசா­யன துறையின் வளர்ச்­சிக்கு உதவும். பல­முனை வரிகள் முடி­விற்கு வரு­வதும், சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு குறைய உள்­ளதும், ரசா­யன துறைக்கு ஊக்­க­ம­ளிக்கும். அனைத்து தொழில்­க­ளுக்கும், ஒற்றை சாளர முறையில் அனு­மதி வழங்­குதல், தொழி­லாளர் மற்றும் நிலம் கைய­கப்­ப­டுத்தும் சட்­டங்­களில் சீர்­தி­ருத்­தங்கள் ஆகி­ய­வையும், ரசா­யன துறை எழுச்சி காண உதவும். இதன் கார­ண­மாக, இந்­திய ரசா­யன துறை, வரும், 2020ல், 22,600 கோடி டாலர், அதா­வது, 15 லட்சம் கோடி ரூபாய் அள­விற்கு வளர்ச்சி காணும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)