நெருக்­க­டி­யிலும் நாட்டின் ஏற்­று­மதி ஓ.கே.: எக்சிம் பேங்க்நெருக்­க­டி­யிலும் நாட்டின் ஏற்­று­மதி ஓ.கே.: எக்சிம் பேங்க் ... ரூபாயின் மதிப்பு 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு ரூபாயின் மதிப்பு 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு ...
அதி­க­ரித்து வரும் மக்­களின் தேவைகள்; ஆதாயம் பெறும் நடுத்­தர நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2016
07:37

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், பெருகி வரும் மக்­களின் தேவையால், சமீப ஆண்­டு­க­ளாக, நுகர்வோர் பொருட்­களை தயா­ரிக்கும் நடுத்­தர நிறு­வ­னங்கள், மிகச்­சி­றப்­பான ஆதாயம் அடைந்து வரு­கின்­றன’ என, இந்­திய வர்த்­தகம் மற்றும் தொழில் கூட்­ட­மைப்பும், பி.டபிள்யு.சி., நிறு­வ­னமும் இணைந்து மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.
ஆய்­வ­றிக்கை விபரம்:இந்­தி­யாவில், வேலை­வாய்ப்­புகள் அதி­க­ரித்­துள்­ளன. பல்­வேறு பணி­க­ளுக்குச் சென்று, பணம் ஈட்­டு­வோரின் எண்­ணிக்கை பெருகி வரு­கி­றது. இதன் கார­ண­மாக, மக்கள், அவ­சிய செல­வுகள் போக, இதர பொருட்கள் வாங்க அதிகம் செல­வி­டு­கின்­றனர். இத்­த­கைய போக்கால், இந்­திய நுகர்வோர் சந்தை விரி­வ­டைந்து, அத்­து­றையில் உள்ள, ஏரா­ள­மான நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு, பிர­மா­த­மான வர்த்­தக வாய்ப்­பு­களை வழங்கி வரு­கி­றது. நுகர்வோர் பொருட்கள் சந்­தையில், பெரிய நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்பு மிகு­தி­யாக உள்ள போதிலும், போட்­டியை சமா­ளிக்கக் கூடிய அணு­கு­மு­றையால், நடுத்­தர நிறு­வ­னங்கள் வளர்ச்சி கண்டு வரு­கின்­றன.
உதா­ர­ண­மாக, சர்­வ­தேச சந்­தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வந்த போது, நடுத்­தர நிறு­வ­னங்கள் உட­னுக்­குடன், நுகர்வோர் பொருட்­களின் விலையை குறைத்து, விற்­ப­னையை அதி­க­ரித்­தன. இது, பெரிய நிறு­வ­னங்­களின் விற்­பனை அளவை பாதித்­தது. அதே­ச­மயம், இதே அணு­கு­மு­றையை, நடுத்­தர நிறு­வ­னங்கள், நிலை­யாக, நீண்ட காலத்­திற்கு கடை­பி­டிக்க முடி­யாது. விரி­வ­டைந்து வரும் சந்­தையில், வலு­வாக காலுன்ற வேண்டும். அதற்கு, பெரிய நிறு­வ­னங்­களைப் போல, கிரா­மப்­புற சந்­தை­க­ளிலும் வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்த வேண்டும்.
இந்­திய மக்கள்தொகையில், 68 சத­வீதம் பேர் கிரா­மங்­களில்வசிக்­கின்­றனர். அதன் கார­ண­மா­கவே, பெரிய நிறு­வ­னங்கள், கிரா­மப்­பு­றங்­களில் வலு­வான விற்­பனை ஒருங்­கி­ணைப்­பிற்கு, அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்­றன. இந்த போட்­டியை சமா­ளிக்க, நடுத்­தர நிறு­வ­னங்­களால் முடி­யாது. அதனால், அவை வேறு வழி­களில், கிரா­மப்­புற வர்த்­த­கத்தை வளைக்க முயற்சி மேற்­கொள்ள வேண்டும்.ஒரே நோக்கில், வர்த்­தக செயல்­பா­டு­களை வடி­வ­மைத்துக் கொள்ள வேண்டும். கிரா­மப்­புற நுகர்­வோரை எளிதில் சென்­ற­டையும் வகையில், பொருட்­களின் வினி­யோக முறை, விலை உள்­ளிட்ட அம்­சங்­களில் இலக்­குடன் செயல்­பட்டால், மேலும் வளர்ச்சி காணலாம்.
தற்­போது, மக்கள் ஆரோக்­கிய பரா­ம­ரிப்­பிற்கு அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கின்­றனர். இயற்கை பொருட்­க­ளுக்கு வர­வேற்பு அதி­க­ரித்து வரு­கி­றது. இது போல உரு­வாகும் புதிய சந்­தை­களை குறி­வைத்து, நடுத்­தர நிறு­வ­னங்கள், தங்­களின் வணிக நட­வ­டிக்­கை­களை அமைத்துக் கொண்டால், வளர்ச்­சியை தக்­க­வைத்துக் கொள்­ளலாம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.
கணினி, லேப் – டாப், ஸ்மார்ட்போன் போன்ற சாத­னங்கள் மூலம், 65 கோடி பேர் இணை­யத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர். வரும், 2020ல், 25 கோடி பேர், ஆன்லைன் வாயி­லாக பொருட்­களை வாங்­குவர் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. அதற்­கேற்ப, விரி­வ­டையும் நுகர்வோர் பொருட்கள் சந்­தையை, நடுத்­தர நிறு­வ­னங்கள் பயன்­ப­டுத்திக் கொள்ள, புதிய உத்­திகள் அவ­சியம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)