என்.பி.எஸ்., கீழ் இரண்டு புதிய திட்டங்கள்என்.பி.எஸ்., கீழ் இரண்டு புதிய திட்டங்கள் ... வங்கி சேமிப்பு கணக்கு அறிய வேண்டியவை வங்கி சேமிப்பு கணக்கு அறிய வேண்டியவை ...
வாய்ப்புகளில் இருந்து விடுதலை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:33

தேர்வு செய்ய அள­வுக்கு அதி­க­மான வாய்ப்­புகள் இருப்­பது, சிறந்­ததை அளிப்­பதை விட சிக்­கலை தான் உண்­டாக்­கு­கி­றது என்­கிறார், பேரி ஷ்வார்ட்ஸ். நவீன வாழ்க்­கையின் இந்த சிக்கல் பற்றி, ‘தி பாரடாக்ஸ் ஆப் சாய்ஸ்: ஒய் மோர் ஈஸ் லெஸ்’ எனும் புத்­த­கத்தில் ஆய்­வுக்­குள்­ளாக்கி, அதற்­கான தீர்­வு­களை வழங்­கு­கிறார். ஜவு­ளிக்­க­டையில் ஒரு ஜீன்ஸ் வாங்­கச்­சென்ற போது, எந்த வகை­யான ஜீன்ஸ் வேண்டும், எந்த அளவில் வேண்டும், எந்த அம்­சங்­களை கொண்­டி­ருக்க வேண்டும் என்று வரி­சை­யாக கேள்­விகள் கேட்­கப்­பட்டு திண­ற­டிக்­கப்­பட்ட அனு­ப­வத்தில் இருந்து தன் புத்­த­கத்தை துவக்கும் ஷ்வார்ட்ஸ், வாய்ப்­பு­களில் இருந்து விடு­படும் வழியை விவ­ரிக்­கிறார். எல்­லா­வற்­றிலும் தேர்வு செய்­வதில் கவனம் செலுத்த வேண்­டி­ய­தில்லை. வழக்­க­மான பொருட்­களை எல்லாம் அதிகம் யோசிக்­காமல் வாங்­கலாம். அள­வுக்கு அதி­க­மான வாய்ப்­புகள் இருப்­பது முடி­வெ­டுப்­பதை சிக்­க­லாக்­கு­கி­றது.பல­ருக்கு அதிக வாய்ப்­புகள் வேண்டும் என்றாலும், பலர், வாழ்க்கை எளி­மை­யாக இருப்ப­தையே விரும்­பு­கின்­றனர். கல்­லுாரி படிப்பு, திரு­மணம், வேலை போன்­ற­வற்றில் வாய்ப்­புகள் தேவை; ஆனால், முடி­வில்­லாத வாய்ப்­புகள் திருப்தி அளிப்­ப­தில்லை. நமக்கு என்ன வேண்டும் என்று தெளி­வாக தெரி­வ­தில்லை; நம் முன் இருக்கும் தக­வல்­களை எல்லாம் எப்படி அலசி புரிந்து கொள்­வது என்­பதும் தெரிவ­தில்லை; இதனால் சரி­யான முடிவு எடுக்க முடி­யாமல் போகி­றது. ஆக, முக்­கியம் என்ன என்றால், அதி­க­மாக்­க­லுக்கு விரும்­பாமல், திருப்­தி­யா­ள­ராக இருக்க வேண்டும். அதி­க­மாக்க விரும்­பு­வது என்­பது எல்­லா­வற்­றிலும் சிறந்­த­தையே நாடும் முழுமை வாதத்தை விட மோச­மா­னது. இவர்கள் எப்­போ­துமே சிறந்­ததை தேடிக்­கொண்டே இருக்­கின்­றனர். ஆனால், அவற்றை கண்­ட­டை­வதே இல்லை. மாறாக திருப்­தி­யா­ளர்கள் தாங்கள் எதிர்­பார்ப்­பது கிடைத்தால் மகிழ்ச்சி அடை­கின்­றனர்.வாய்ப்­பு­களை தேர்வு செய்ய, குறை­வான நேரமே ஒதுக்க முடி­வது, சரி­யான முடிவை மேற்­கொள்­வதை சிக்­க­லாக்கி மகிழ்ச்­சியை குறைக்­கி­றது. சில நேரங்­களில் நாம் மேற்­கொள்ளும் தேர்­வு­களும் போது­மா­ன­தாக இருப்­ப­தில்லை. தேர்வு செய்த பிறகு, மற்ற வாய்ப்­பு­களை பார்த்து ஏமாற்றம் அடை­கிறோம். எல்­லா­வற்­றையும் மற்­ற­வர்கள் வைத்­துள்­ள­வற்­றுடன் ஒப்­பிட்டு பார்ப்­பது தான் பிரச்னை. ஒப்­பீடு, குறிப்­பாக சமூக ஒப்­பீடு திருப்­தியில் இருந்து விலக்­கு­கி­றது. எனவே, நாம் எதை தேர்வு செய்­வது என்­பதை தேர்வு செய்ய வேண்டும். முக்­கி­ய­மா­ன­வற்றை தேர்வு செய்ய நேரம் செல­வி­டுங்கள். முக்­கி­ய­மற்­ற­வற்றில் வாய்ப்­பு­களில் நேரத்தை வீண­டிக்க வேண்டாம். வாய்ப்­பு­களில் இருந்து தேர்வு செய்­யா­தீர்கள். தேவைக்கு ஏற்ப தேர்ந்­தெ­டுங்கள். அதி­க­மா­வதை நாடாமல் திருப்­தியை நாடுங்கள். எப்­போதும் நன்றி உணர்வு கொண்­டி­ருங்கள். நீங்கள் நன்றி கொள்­ளக்­கூ­டிய ஐந்து விஷ­யங்­களை தினமும் பட்­டி­ய­லி­டுங்கள். வருத்­தப்­ப­டு­வதை குறைத்­துக் ­கொள்­ளுங்கள். மாற்­றத்தை ஏற்­றுக்­கொள்ள தயா­ராக இருங்கள். தற்­போ­துள்ள நல்ல விஷ­யங்­களில் மனதை செலுத்­துங்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)