பண பரிவர்த்தனையில் புதுமைபண பரிவர்த்தனையில் புதுமை ... டட்சன் கோ பிளஸ் கார்கள் ஏற்­று­ம­தியை துவக்­கி­யது நிஸான் டட்சன் கோ பிளஸ் கார்கள் ஏற்­று­ம­தியை துவக்­கி­யது நிஸான் ...
கிரெடிட் ரிப்போர்ட் பெறு­வது எப்­படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:37

ரிசர்வ் வங்­கியின் உத்­த­ர­வு­படி, ஆண்­டுக்கு ஒரு முறை கிரெடிட் அறிக்கையை இல­வ­ச­மாக வழங்க வேண்டும் எனும் நடை­முறை, அடுத்த ஆண்டு துவக்கம் முதல் அம­லுக்கு வர உள்ளது.

கிரெடிட் அறிக்கை என்­பது, தனி­ந­பர்கள் நிதி வாழ்க்­கையில் முக்­கிய பங்கு வகிக்­கிறது. கடன் தகு­தியை தீர்­மா­னிக்க உதவும் கிரெடிட் ஸ்கோர் உள்­ளிட்ட விப­ரங்­களை இந்த அறிக்கை கொண்­டி­ருக்கும். வீட்­டுக்­கடன் போன்­ற­வற்றை வழங்கும் முன், வங்­கிகள் பரி­சீ­லிக்கும் முக்­கிய அம்­சங்­களில் ஒன்­றாக இது இருக்­கி­றது. ‘கிரெடிட் இன்­பர்­மேஷன் ரிப்போர்ட்’ என, குறிப்­பி­டப்­படும் இந்த அறிக்­கையை, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, ஆண்­டுக்கு ஒரு முறை இல­வ­ச­மாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது. இந்த நடை­முறை அடுத்த ஆண்டு ஜன­வரி, 1ம் தேதி முதல் அம­லுக்கு வரு­கி­றது. கிரெடிட் ஸ்கோர் தொடர்­பான விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்து வரும் நிலையில், ஆண்­டுக்கு ஒரு கிரெடிட் அறிக்­கையை இல­வ­ச­மாக பெற முடி­வது மிகவும் பய­ன­ளிக்கும் என கரு­தப்­ப­டு­கி­றது.
கிரெடிட் அறிக்கை கிரெடிட் ஏஜன்சி என குறிப்­பி­டப்­படும் அமைப்­பு­களால், ஒரு­வரின் கடன் வர­லாறு தொடர்­பான தக­வல்கள் அடங்­கிய விரி­வான அறிக்­கையே, ‘கிரெடிட் இன்­பர்­மேஷன் ரிப்போர்ட்’ என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. இந்­தி­யாவில் தற்­போது ‘சிபில், எக்ஸ்­பீ­ரியன், ஈக்­யூபேக்ஸ், கிரிப் ஹை மார்க்’ ஆகிய நான்கு அமைப்­புகள் இந்த கிரெடிட் அறிக்­கையை வழங்கி வரு­கின்­றன. வங்­கிகள் உள்­ளிட்ட நிதி அமைப்­புகள், கடன் வழங்கும் முன், கடன் தகு­தியை தீர்­மா­னிக்க பல விஷ­யங்­களை கவ­னத்தில் கொள்­கின்­றன. கடன் கேட்டு விண்­ணப்­பிக்கும் நபர், இது­வரை பெற்ற கடன்­களை முறை­யாக செலுத்­தி­யி­ருக்­கி­றாரா என்­பதை தெரிந்து கொள்­வ­தற்­காக கிரெடிட் அமைப்­பு­க­ளிடம் கிரெடிட் அறிக்­கையை கோரு­கின்­றன. மாதத்­த­வணை செலுத்­தப்­பட்ட விதம், நிலு­வையில் ஏதேனும் தொகை உள்­ளதா போன்ற விப­ரங்கள் இதில் இடம்­பெற்­றி­ருக்கும். கடன் அனு­மதி வழங்­கப்­படு­வதில் இது முக்­கிய பங்கு வகிக்­கி­றது.
கடன் வர­லாறு அடைப்­ப­டை­யி­லான கிரெடிட் ஸ்கோர் இந்த அறிக்­கையின் முக்­கிய அம்­ச­மாகும். 300 முதல் 900 வரை மதிப்­பெண்­களை கொண்­ட­தாக இது அமை­கி­றது. பொது­வாக கிரெடிட் ஸ்கோர் அதிகம் இருந்தால் கடன் எளி­தாக கிடைக்கும். மேலும், வட்டி விகி­தமும் குறை­வாக அமைய வாய்ப்­புள்­ளது. வழக்­க­மாக, 750க்கும் அதிக மதிப்பெண் கொண்­ட­வர்கள் எளி­தாக கடன் பெற முடி­வ­தாக கரு­தப்­ப­டு­கி­றது. ஒவ்­வொரு அமைப்பும் தனித்­த­னியே அறிக்கை வழங்­கு­கின்­றன.
கடன் தகுதிவீட்­டுக்­கடன் உள்­ளிட்ட கடன்­க­ளுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் கிரெடிட் ஸ்கோர் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. கிரெடிட் ஸ்கோரை அதி­க­ரிக்கும் வகை­யி­லான நிதி பழக்­கங்­களை மேற்­கொள்ள வேண்டும் என்றும் நிதி ஆலோ­ச­கர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர்.கிரெடிட் அறிக்­கையை பொது மக்­களும் அணுக முடியும். கிரெடிட் அமைப்­பு­க­ளிடம் இருந்து அறிக்­கையை கட்­டணம் செலுத்தி பெற வேண்டும். 400 முதல் 550 ரூபாய் வரை கட்­ட­ண­மாக அமை­கி­றது. இதற்­காக பான் கார்டு, இ–மெயில் உள்ளிட்ட விப­ரங்­களை தெரி­வித்து விண்ணப்­பிக்க வேண்டும். இந்த நடைமுறையை மேலும் எளி­தாக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, கிரெடிட் அமைப்­புகள் ஆண்­டுக்கு ஒரு முறை கிரெடிட் அறிக்­கையை இல­வ­ச­மாக வழங்க வேண்டும் என அறி­வு­றுத்­தி­யுள்­ளது. கிரெடிட் அறிக்கை உள்­ள­வர்கள் அனை­வ­ருக்கும் இந்த வசதி அளிக்­கப்­பட வேண்டும். அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் இது அம­லுக்கு வரு­கி­றது. இதன் படி, மின்னணு வடிவில் கிரெடிட் அறிக்­கையை வழங்க வேண்டும். கிரெடிட் ஸ்கோர் உள்­ளிட்ட தக­வல்கள் இதில் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும். கடன் தகுதி தொடர்­பான அண்மை கால தக­வல்­களை கொண்­ட­தாக இது அமைந்­தி­ருக்கும். இந்த அறிக்­கையில் ஏதேனும் தகவல் பிழை இருப்­ப­தாக கரு­தினால் அதை சரி செய்யும் வாய்ப்பும் வாடிக்­கை­யா­ள­ருக்கு அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.
பெறு­வது எப்­படி?கிரெடிட் அறிக்­கையை பெறும் நடை­முறை பற்­றிய விரி­வான குறிப்­பு­களை கிரெடிட் அமைப்­புகள் தங்கள் இணை­ய­த­ளங்­களில் குறிப்­பிட வேண்டும் என, ரிசர்வ் வங்கி அறி­வு­றுத்­தி­யுள்­ளது. கிரெடிட் அறிக்­கையில், குறைந்­தது, கடந்த 36 மாதங்­க­ளுக்­கான மாதத்­த­வணை விப­ரங்கள், கடன் பெற்ற வங்­கிகள், கடன் வகை, மீத­முள்ள தொகை உள்­ளிட்ட தக­வல்கள் இடம்­பெற்­றி­ருக்கும். கிரெடிட் அறிக்­கையை கோரி பார்­வை­யிட்ட வங்­கிகள் பற்­றிய தக­வலும் இடம்­பெற்­றி­ருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)