பதிவு செய்த நாள்
12 செப்2016
03:02

சென்னை : நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரிய மின்சக்தி திட்டங்களில், அதானி குழுமம், பெரும்பான்மை பங்களிப்பைக் கொண்டு உள்ளது.
செயல்பாட்டில் உள்ள சூரிய மின்சக்தி திட்டங்கள் மற்றும் வீட்டுக் கூரைகளில் பொருத்தப்படும் சூரிய மின்சக்தி திட்டங்களில், டாடா குழுமம் முன்னணியில் உள்ளது. இவ்வகை திட்டங்களில், அதானி குழுமம், 11 சதவீதம் மற்றும், ரினியு பவர், 10 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. அடுத்த இடங்களில், சன் எடிசன், 8.5; அக்மி, 8; அசூர் பவர், 5; டாடா பவர், 3.8 சதவீத பங்களிப்புடன் உள்ளன. பெரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டங்களில், சுஸ்லான் எனர்ஜி மற்றும், ஹீரோ பியூச்சர் எனர்ஜிஸ் நிறுவனம், தலா, 3.7 சதவீத பங்களிப்பை கொண்டு உள்ளன. இத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களில், 80 சதவீதம், 20 நிறுவனங்கள் வசம் உள்ளன.
கடந்த ஆகஸ்ட் நிலவரப்படி, நாட்டின், சூரிய மின்உற்பத்தி திறன், 8.1 கிகாவாட் ஆக உள்ளது. இந்தாண்டில், ஆகஸ்ட் வரை, புதிதாக, 2.8 கிகா வாட் சூரிய மின் உற்பத்தி திறன், பொது மின்வினியோகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. நாட்டில், 21 கிகாவாட் அளவிலான சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்பாட்டுக்கு வர உள்ளன. அதில், 14 கிகாவாட் மின் உற்பத்திக்கான பணிகள், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், 7 கிகா வாட் சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு, ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட உள்ளன. வீடுகளின் கூரைகளில் பொருத்தப்பட்ட சூரிய மின்சக்தி திறன், 601 மெகாவாட் என்ற அளவிற்கே உள்ளது. இப்பிரிவில், டாடா குழுமம் முதலிடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|