பதிவு செய்த நாள்
12 செப்2016
09:46

மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் துவங்கி உள்ளன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 100 புள்ளிகளுக்கு மேலும் சரிந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 546 புள்ளிகள் சரிந்து 28,251.31 புள்ளிகளாகவும், நிப்டி 127 புள்ளிகள் சரிந்து 8739.70 புள்ளிகாகவும் உள்ளன.
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளதாலும், முக்கிய ஆட்டோ மற்றும் வங்கித்துறை பங்கு மதிப்பு கடுமையாக சரிவடைந்ததன் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஜூன் மாதத்திற்கு பிறகு தற்போது தான் சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|