பதிவு செய்த நாள்
12 செப்2016
15:46

சேலம்:''தமிழக ஆவினில், தேக்கம் அடைந்துள்ள, 17 ஆயிரம் டன் பால் பவுடரை, தனியார் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும்,'' என, தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க பொது செயலர் ராஜேந்திரன் வலியுறுத்திஉள்ளார்.அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் உள்ள, 17 ஆவின் ஒன்றியங்களில், 17 ஆயிரம் டன் பால் பவுடர் தேக்கம் அடைந்துள்ளது. பால் பவுடர், ஒரு கிலோ உற்பத்தி செலவு, 220 ரூபாய் என்ற நிலையில், தேக்கத்தை குறைக்கும் வகையில், கிலோ, 151 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையிலும், தேக்கம் குறைந்தபாடு இல்லை.வாங்க தயார்:ஆவின் பால் பவுடரை, தனியார் நிறுவனங்கள், நிர்ணயம் செய்யப்பட்டதை விட, கிலோவுக்கு ஐந்து ரூபாய், கூடுதலாக கொடுத்து வாங்க தயாராக உள்ளன. ஆனால், கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தேசிய கூட்டுறவு பால் கார்ப்பரேஷன் மூலமாகவும் மட்டுமே விற்க வேண்டும் என, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால், பால் பவுடரின் தேக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்த தேக்கத்தால், 17 பால் ஒன்றியங்கள், 11 ஆயிரத்து, 503 கூட்டுறவு சங்கங்களுக்கு, 60 நாட்கள் நிலுவை தொகையாக, 450 கோடி ரூபாய் வரை பாக்கி வைத்துள்ளது. இதனால், பால் கூட்டுறவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர்களுக்கு, 30 நாட்கள் பாக்கியாக, 250 கோடி ரூபாய் வரை நிலுவை வைத்துள்ளன.அனுமதி தேவை:பால் பவுடர் தேக்கத்தை குறைக்க, அரசு கொள்கை முடிவில் மாற்றம் செய்து, தனியார் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். இதன்மூலம், தேக்கம் அடைந்துள்ள, 17 ஆயிரம் பால் பவுடர் விற்பனை செய்யப்படுவதோடு, ஆவின் நிறுவனம், வளர்ச்சி பாதைக்கு திரும்பும். தற்போது, தமிழகத்தில் உற்பத்தியாகும் முழு பாலையும், ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|