பதிவு செய்த நாள்
12 செப்2016
16:06

ராமேஸ்வரம்;ராமேஸ்வரத்தில் இறால் மீனுக்கு விலை கிடைக்காமல் நஷ்டமடைந்த மீனவர்களுக்கு காரல் மீன் வரத்து மகிழ்ச்சி அளித்தது.ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று எட்டு நாட்களுக்கு பிறகு செப்.,10ல் மீன்பிடிக்க சென்றனர். வழக்கம் போல், மீன்வளம் நிறைந்த இலங்கை எல்லையில் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினர் விரட்டினர். இதனால், மீனவர்களுக்கு எதிர்பார்த்த இறால் பாடின்றி படகிற்கு 30 முதல் 40 கிலோ மட்டுமே சிக்கியது.கிலோ இறாலுக்கு ரூ. 450 முதல் 480 வரை விலை நிர்ணயித்து கிலோவுக்கு ரூ. 120 குறைத்து துாத்துக்குடி ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கினர். இந்த விலை வீழ்ச்சியால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.கை கொடுத்த காரல்:நேற்று பெரும்பாலான படகில் 2 முதல் 3 டன் காரல் மீன் சிக்கியது. இதனை கிலோ ரூ. 15க்கு வியாபாரிகள் வாங்கியதால் நஷ்டத்தை காரல் மீன் ஈடு செய்ததாக மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இம்மீன்கள் கோழி தீவனத்திற்கு நாமக்கல், திருச்செங்கோடு கோழி பண்ணை உரிமையாளர்கள் வாங்கி செல்வார்கள். இறால் விலை வீழ்ச்சியை சமாளிக்க, அனைத்து படகிலும் காரல் மீனுக்கு வலை விரிக்க மீனவர்கள் முடிவு செய்தனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|