பதிவு செய்த நாள்
13 செப்2016
07:45
புதுடில்லி : நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான, நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த ஆகஸ்டில், 5.05 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஜூலையில், 6.07 சதவீதமாக இருந்தது. கடந்த, 2015 ஆகஸ்டில், சில்லரை விலை பணவீக்கம், 3.74 சதவீதமாக இருந்தது.
தொழில் துறை :பருவமழை பொழிவு, வேளாண் உற்பத்தி அதிகரிப்பு போன்றவற்றால், உணவுப் பொருட்கள் விலை சற்று குறைந்து, சில்லரை விலை பணவீக்கம் சரிய வழிவகுத்து உள்ளது. கடந்த ஜூலையில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி, 2.4 சதவீதம் குறைந்துள்ளது; தயாரிப்பு துறை உற்பத்தி, 3.4 சதவீதம் குறைந்துள்ளது. அதேசமயம், சுரங்க துறை உற்பத்தி, 0.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.ஏப்., – ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், தொழில் துறை உற்பத்தி குறியீடு, 0.2 சதவீதம் குறைந்துள்ளது. சில்லரை விலை பணவீக்கம் அடிப்படையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. ரிசர்வ் வங்கி, 2017 மார்ச் மாதம், நாட்டின் சில்லரை பணவீக்கம், ஐந்து சதவீதம் என, இலக்கு நிர்ணயித்துள்ளது.
ரெப்போ வட்டி:இந்த இலக்கை விட, தற்போது சில்லரை பணவீக்கம் அதிகமுள்ளதால், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை குறைக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதனிடையே, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா பேசுகையில், ‘‘ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் குறைக்க வாய்ப்பு உள்ளது,’’ என, தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|