பதிவு செய்த நாள்
18 செப்2016
01:31

புதுடில்லி:ஜியோனி நிறுவனம், மொபைல் போன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், ஹரியானா மாநிலத்தில், மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை 500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஜியோனி மொபைல்ஸ் தலைவர் லியு லிராங் கூறியதாவது:எங்கள் நிறுவனம், இந்திய சந்தையில், 2013ல் நுழைந்தது. கடந்த, 2015ல், எங்கள் விற்றுமுதல், 3,250 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இந்தியா எங்களுக்கு, முக்கிய சந்தையாக திகழ்கிறது. எனவே, ஹரியானாவில், 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளோம். இதற்காக, அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பரிதாபாத்தில், 50 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அங்கு, ஆண்டுக்கு, மூன்று கோடி மொபைல் போன்கள் தயாரிக்கும் திறனில் ஆலை அமைக்கப்படும். இந்த ஆலையின் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளில், 28 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|