பதிவு செய்த நாள்
18 செப்2016
01:32

புதுடில்லி:எஸ்.யு.வி., மாடல் கார்களில், மாருதி சுசூகியின் விட்டாரா பிரெஸ்ஸா கார் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. மாருதி சுசூகி இந்தியா, உள்நாட்டில், கார்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில், எஸ்.யு.வி., கார்களுக்கு, தேவை அதிகரித்து வருகிறது. இதனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள், அதிகளவில், எஸ்.யு.வி., மாடல் கார்களை தயாரிக்க ஆர்வம் காட்டுகின்றன. அதன்படி, மாருதி சுசூகி, கடந்த மார்ச் மாதம், விட்டாரா பிரெஸ்ஸா மாடல் காரை அறிமுகம் செய்தது. இந்த காருக்கு, வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இதையடுத்து, உள்நாட்டில், ஏப்., மாதம் முதல், ஆக., வரை, விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனை, 41 ஆயிரத்து, 484 ஆக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் க்ரெட்டா மாடல் கார் விற்பனை, 39 ஆயிரத்து, 88 கார்கள் என்றளவில் உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|