பதிவு செய்த நாள்
18 செப்2016
01:36

கோல்கட்டா:வால்வோ நிறுவனம், மேற்கு வங்க மாநிலத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளுக்கு, சமீபத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது, அந்நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை சந்தித்து, மேற்கு வங்கத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், சுவீடன் நாட்டின் முன்னணி, மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான வால்வோ, மேற்கு வங்கத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு, பனகார் தொழிற் பூங்காவில், 25 ஏக்கர் நிலம் வழங்க உள்ளதாக, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, டாடா மெடாலிக்ஸ், தொழில் பயிற்சி மையம் அமைக்க, மேற்கு வங்க அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், அந்த மையத்தில், ஆண்டுதோறும், 1,200 இளைஞர்களுக்கு, இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|