பதிவு செய்த நாள்
18 செப்2016
01:39

புதுடில்லி:உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையை, இந்தியாவைச் சேர்ந்த, சிவில் சமூக மையம், கனடாவின் பிரேசர் மையம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. அதன் விபரம்:உலகளவில்,159 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில், அரசு கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, குறியீட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில், இந்தியா அனைத்து பிரிவுகளிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. உதாரணமாக, நாட்டின் சட்ட திட்டம் மற்றும் சொத்துரிமை பிரிவில், இந்தியா, 86வது இடத்தில் உள்ளது.
அதுபோல, நிதி வளத்தில், 130; சுதந்திரமான சர்வதேச வர்த்தகத்தில், 144; கடுமையான கட்டுப்பாடுகளில், 132வது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக, உலக வர்த்தக சுதந்திர குறியீட்டில், இந்தியா, 10 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு, 112வது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடத்தில், சீனா உள்ளது. வங்கதேசம், 121வது இடத்திலும், பாகிஸ்தான் 133வது இடத்திலும், பின்தங்கி உள்ளன.
பூடான், 78, நேபாளம், 108, இலங்கை, 111 ஆகியவை, இந்தியாவை விஞ்சியுள்ளன. ஹாங்காங், உலகளவில் பல்வேறு பிரிவுகளில், சிறப்பான பொருளாதார சுதந்திரம் உள்ள நாடு என்ற வகையில் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்த இடங்களில், சிங்கப்பூர், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, கனடா, ஜார்ஜியா, அயர்லாந்து, மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளன. கடைசி 10 இடங்களில், ஈரான், அல்ஜீரியா, சாத், நியூகினியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|