பதிவு செய்த நாள்
19 செப்2016
05:07

பிலாஸ்டிக் பணம் என பிரபலமாக குறிப்பிடப்படும், கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள சாதகங்களையும், பாதகங்களையும் நீங்கள் அறிந்திருக்கலாம். பொருட்களை வாங்கவும், பணம் செலுத்தவும் ரொக்கத்தை நாடாமல் கிரெடிட் கார்டை பயன்படுத்திக்கொள்வதில் பலவித அணுகூலங்கள் இருக்கின்றன.
பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதும் சகஜமாக இருக்கிறது. எல்லாம் சரி, குடும்ப உறுப்பினர்களுக்கு கிரெடிட் கார்டை பெற்றுத்தரும் வசதி இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வகை கார்டுகள் ஆட் ஆன் கார்டு அல்லது சப்ளிமென்ட்ரி கார்டு என குறிப்பிடப்படுகின்றன. பிரதான கார்டு வைத்திருக்கும் நபர், 18 வயதுக்கு மேல் உள்ள தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பெற்றுத்தரக்கூடிய துணை கார்டாக இது அமைகிறது. இந்த கார்டை பிரதான கார்டுதாரரின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கான கிரெடிட் கார்டு போல பயன்படுத்தலாம். பிரதான கார்டு தாரர் தீர்மானிக்கும் வரம்புகளுக்கு ஏற்ப குடும்ப உறுப்பினர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். தொகையை செலுத்தும் பொறுப்பு கார்டுதாரருடையது.
வரம்புகளுடன் வசதிதுணை கார்டுகள் வழங்குவதற்காக, ஒவ்வொரு கார்டு நிறுவனமும் அதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளன. கார்டுதாரர் விரும்பினால் ஒன்றுக்கும் மேற்பட்ட துணை கார்டுகளை பெற முடியும். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் வாய்ப்புள்ளது.உறுப்பினர்கள் இதற்காக எந்த ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டாம். கார்டு தாரர் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் இவை வழங்கப்படுகின்றன. பிரதான கார்டின் வசதிகள் இதற்கும் பொருந்தும். ஆனால், பயன்பாட்டு அளவு மற்றும் தினசரி வரம்பை கார்டுதாரர் நிர்ணயிக்கலாம்.
பொதுவாக, வங்கிகள் இவற்றை கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்குகின்றன. எனினும், சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம். துணை கார்டுகள் தொடர்பான பயன்பாட்டு விபரம் பிரதான பில்லுடன் சேர்ந்து வந்துவிடும். தேவை எனில், துணை கார்டின் பயன்பாடு தொடர்பான தகவல்களையும் பெறலாம்.
யாருக்கு வழங்கலாம்? கல்லுாரி மாணவர்கள், இல்லத் தலைவிகள், வயதான குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த வகை கார்டுகள் ஏற்றவை. தனியே கார்டு பெற தேவையான ஆவணங்கள், தகுதி இவர்களிடம் இல்லாமல் போகலாம். இது போன்ற சூழலில் கிரெடிட் கார்டு வசதியை இவர்களும் பெற துணை கார்டுகள் வழிசெய்கின்றன. வளர்ந்து வரும் பிள்ளைகளுக்கு பரிசாகவும் இந்த கார்டை அளிக்கலாம். இதன் மூலம் பிளாஸ்டிக் பண பயன்பாடு மற்றும் கடன் வசதியை கையாளும் வாய்ப்பையும் அளிக்கலாம். ஆனால், அதற்கு முன், கிரெடிட் கார்ட் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ள அணுகூலங்கள், சிக்கல்களை எடுத்துக் கூற வேண்டும். கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தா விட்டால், கடன் தகுதியை தீர்மானிக்கும் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும் என்பதையும் புரியவைப்பது நல்லது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|