பதிவு செய்த நாள்
20 செப்2016
05:02

புதுடில்லி : பியூச்சர் குழுமம், ஹெரிடேஜ் புட்சின், சில்லரை வணிகப் பிரிவை வாங்குவதற்கான முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 1992ல், ஹெரிடேஜ் குழுமத்தை துவக்கினார். இந்த குழுமம், பால் பொருட்கள், சில்லரை வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுமத்தின் மதிப்பு, 2,381 கோடி ரூபாய். தற்போது, ஹெரிடேஜ் குழுமத்திற்கு, ஆந்திர மாநிலம் – ஐதராபாத், தமிழகம் – சென்னை, கர்நாடகா – பெங்களூரில், 100க்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன.
இந்நிலையில், பிக்பஜார் உள்ளிட்டவற்றை நிர்வகித்து வரும் பியூச்சர் குழுமம், ஹெரிடேஜ் குழுமத்தின், சில்லரை வணிக பிரிவை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த செய்தியால், ஹெரிடேஜ் நிறுவன பங்குகள் விலை, நேற்று, 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|