பதிவு செய்த நாள்
20 செப்2016
05:02

புதுடில்லி : மத்திய வர்த்தக அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்கா, சர்வதேச வர்த்தகம் தொடர்பான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து, ஜூலையில், உலக வர்த்தக அமைப்பிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில், மின்னணு வர்த்தகம் உள்ளிட்ட புதிய அம்சங்களுடன், முதலீடுகள், அரசு கொள்முதல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் அறிக்கையை, மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தற்போது, மின்னணு வர்த்தகம் குறித்து, பல நாடுகளிடையே தெளிவற்ற விதிமுறைகள் உள்ளன. இந்த வர்த்தகம் தொடர்பாக, அமெரிக்காவிற்கு ஒரு சிந்தனையும், வளர்ந்து வரும் நாடுகளுக்கு வேறு யோசனைகளும் உள்ளன. ஆகவே, இப்பிரச்னையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஒத்த கொள்கையை வகுப்பது அவசியமாகிறது. இது தொடர்பாக, மத்திய அரசின் நிலைப்பாடு, விரைவில் உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|