பதிவு செய்த நாள்
20 செப்2016
05:04

டேராடூன் : பதஞ்சலி நிறுவனம், நேபாளம் நாட்டில், மூலிகை உணவு பூங்கா அமைக்க முடிவு செய்துள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமானது, பதஞ்சலி நிறுவனம். இந்நிறுவனம், மூலிகை, ஆயுர்வேதம் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நேபாள பிரதமர் புஷ்பா கமல் தால், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் வந்த போது, பாபா ராம்தேவ், அவரை சந்தித்துப் பேசினார். இதையடுத்து பதஞ்சலி நிறுவனம், நேபாளத்தில், மூலிகை உணவு பூங்கா அமைக்க போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பாபா ராம்தேவ் கூறியதாவது: எங்கள் நிறுவனம், நேபாளத்தில், மூலிகை உணவு பூங்கா அமைக்க உள்ளது. இதற்கான பணிகள், நவ., மாதம் துவங்கும். நேபாளத்தில், 100 – 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், உணவு பூங்கா அமைக்க உள்ளோம். இதை தொடர்ந்து, ம.பி., – உ.பி., – அசாம் மாநிலங்களிலும், உணவு பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|