பதிவு செய்த நாள்
20 செப்2016
05:05

புதுடில்லி : ‘இந்தியாவின் வாகன உதிரி பாகங்கள் சந்தை மதிப்பு, தற்போது, 43,550 கோடி ரூபாயாக உள்ளது; இது, 2026ல், 2 – 2.14 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’ என, இந்திய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பு மதிப்பிட்டு உள்ளது.
ஜெர்மனியின், பிராங்பர்ட் நகரில், சமீபத்தில், ‘ஆட்டோ மெகானிக்கா’ என்ற வாகன உதிரி பாகங்கள் கண்காட்சி நடை பெற்றது.
இந்திய நிறுவனங்கள் :இதில், சோனா கோயோ ஸ்டீயரிங் சிஸ்டம்ஸ், ஸ்ரீராம் பிஸ்டன்ஸ் அண்ட் ரிங்ஸ், டால்புரோஸ் ஆட்டோமோடிவ் காம்பனன்ட்ஸ், லுாகாஸ் டி.வி.எஸ்., உள்ளிட்ட, 170க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் காட்சிக்கு வைத்தன. அவற்றின் தரம், நேர்த்தி, வடிவமைப்பு, நவீன ‘பேக்கிங்’ ஆகியவை, சர்வதேச வாகன நிறுவனங்களிடம், இந்திய நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்க துணை புரிந்துள்ளது. இது, இந்தியவாகன உதிரிபாகங்கள் துறைக்கு, மிகச்சிறப்பான வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
கண்காட்சிஅடுத்த ஆண்டு, மார்ச் 21 – 24 வரை, டில்லியில், ‘அக்மா ஆட்டோமெகானிக்கா’ வாகன கண்காட்சி நடைபெற உள்ளது. இக்கண்காட்சி, இந்திய வாகனம், வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் நவீன தயாரிப்புகளை, சர்வதேச வாகன நிறுவனங்கள் காண வாய்ப்பளிக்கும் என, ஜெர்மன் கண்காட்சியில் பங்கேற்ற, இந்திய வாகன உதிரிபாகங்கள் கூட்டமைப்பு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|