பதிவு செய்த நாள்
20 செப்2016
05:06

புதுடில்லி : மத்திய அரசு, ‘மார்பிள்’ எனப்படும், பளிங்கு கற்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது; அதேசமயம், அவற்றுக்கான சுங்க வரி, மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.இதனால், கச்சா பளிங்கு கற்களை இறக்குமதி செய்து, சீரமைத்து தரும் தொழில், வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு, 2014 – 15ம் நிதியாண்டில், கச்சா மார்பிள் மற்றும் ‘டிராவெர்டைன்’ எனப்படும், சுண்ணாம்பு சலவைக் கற்கள் இறக்குமதிக்கு, புதிய கட்டுப் பாடுகளை விதித்தது.
கூட்டமைப்பு புகார்அதன்படி, ஓராண்டிற்கான, கச்சா மார்பிள், டிராவெர்டைன் கற்கள் இறக்குமதி வரம்பு, 8 லட்சம் டன் ஆகவும், குறைந்தபட்ச இறக்குமதி கட்டணம், டன்னுக்கு, 325 டாலர் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிதியாண்டில், 24 கோடி டாலர் மதிப்புள்ள, கச்சா மார்பிள், டிராவெர்டைன் கற்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இது, 2015 – 16ம் நிதியாண்டில், 26 கோடி டாலராக அதிகரித்தது. இருந்தபோதிலும், மார்பிள் இறக்குமதி வரம்பால், இத்துறையில் உள்ள, 5,000 நிறுவனங்களில், 472 பெரிய நிறுவனங்கள் மட்டுமே பயனடைவதாக, டில்லி மார்பிள் முகவர்கள் கூட்டமைப்பு, புகார் தெரிவித்தது.
இது தொடர்பாக, இக்கூட்டமைப்பின் பிரதிநிதிகள், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என, வலியுறுத்தினர். மேலும், கச்சா மார்பிள் கற்களுக்கான, குறைந்தபட்ச இறக்குமதி வரியை நீக்கினால், செயற்கையாக விலையை உயர்த்தி, இறக்குமதி செய்வது கட்டுக்குள் வரும் என்பதுடன், அதன் வாயிலாக நடைபெறும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும் எனவும், தெரிவிக்கப்பட்டது.
இதை பரிசீலித்த மத்திய அரசு, தற்போது, கச்சா மார்பிள், டிராவெர்டைன் கற்கள் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. அதேசமயம், அவற்றுக்கான இறக்குமதி வரியை, தற்போதைய, 10 சதவீதத்தில் இருந்து, 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறைந்தபட்ச இறக்குமதி கட்டணம், டன்னுக்கு, 200 டாலராக குறைக்கப்பட்டு உள்ளது; ஒரு சதுர மீட்டர் மார்பிள் கற் பலகை இறக்குமதிக்கு, குறைந்தபட்ச கட்டணம், 40 டாலர்; கிரானைட் கற்பலகைக்கு, 50 டாலர் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
மீண்டும் திறக்கப்படும்மார்பிள் கற்பலகை மற்றும் கிரானைட் கற்பலகைகளுக்கான இறக்குமதி வரி, 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம், கச்சா மார்பிள் கற்கள் இறக்குமதி அதிகரிக்கும்; மூலப்பொருள் பற்றாக்குறையால் மூடப்பட்ட, மார்பிள் கல் சீரமைப்பு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|