பதிவு செய்த நாள்
21 செப்2016
07:36

புதுடில்லி : எண்ட்யூரான்ஸ் டெக்னாலஜிஸ், கிரீன் சிக்னல் பயோ ஆகிய நிறுவனங்களின், பங்கு வெளியீட்டிற்கு, ‘செபி’ அனுமதி வழங்கியுள்ளது.
மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும், எண்ட்யூரான்ஸ் டெக்னாலஜிஸ், ரூ.2.46 கோடி பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் பங்கு வெளியீட்டு பணிகளை ஆக்சிஸ் கேபிடல், சிட்டி குரூப் குளோபல் மார்க்கெட்ஸ் ஆகியவை மேற்கொள்ள உள்ளன. கிரீன் சிக்னல் பயோ பார்ம் நிறுவனமும், பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம், கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் கேட்டிருந்தன. தற்போது ‘செபி’ அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனங்கள், பங்கு வெளியீட்டிற்கான அடுத்த கட்ட பணிகளை துவங்க உள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|