பதிவு செய்த நாள்
26 செப்2016
23:33
புதுடில்லி : ஹீரோ மோட்டோகார்ப், ‘அச்சீவர் 150’ என்ற நவீன இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இருசக்கர வாகன விற்பனையில், ஹீரோ மோட்டோகார்ப் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில், 100 சி.சி., மற்றும் 125 சி.சி., திறன் உடைய இருசக்கர வாகன சந்தையில், ஹீரோ நிறுவனத்தின் பங்கு, முறையே, 65 சதவீதம் மற்றும் 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் தலைவர் பவன் முஞ்சால் கூறியதாவது: நிறுவனம், 100 சி.சி., மற்றும் 150 சி.சி., திறன் உடைய, இருசக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ளது. தற்போது, பிரிமியம் வகை வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த வகையில் தற்போது, இரு வகையான, அச்சீவர் 150, இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில், இவை, 61,800 ரூபாய் மற்றும் 62,800 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|