நிர்­வாக சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கையில் ரிலையன்ஸ்நிர்­வாக சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கையில் ரிலையன்ஸ் ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.44 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.66.44 ...
வர்த்­தக வழக்­கு­களை விசா­ரிக்க சர்­வ­தேச மத்­தி­யஸ்த மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2016
04:12

மும்பை : இந்­தி­யாவில், முதன்­மு­றை­யாக, உலக அள­வி­லான வர்த்­தக வழக்­கு­களை விசா­ரிக்க, மும்­பையில், சர்­வ­தேச மத்­தி­யஸ்த மையம் அமைய உள்­ளது.
தற்­போது, சிங்­கப்பூர், ஹாங்காங் மற்றும் லண்டன் நக­ரங்­களில், இது போன்ற சர்­வ­தேச மத்­தி­யஸ்த மையங்கள் செயல்­பட்டு வரு­கின்­றன. இவற்றில் ஏதா­வது ஒரு மையம் மூலம், இந்­திய நிறு­வ­னங்கள், அவற்றின் அயல்­நாட்டு வர்த்­தகப் பிரச்­னை­களை முறை­யிட்டு, தீர்வு கண்டு வரு­கின்­றன. இனி, இந்த மையங்­க­ளுக்கு மாற்­றாக, ‘எம்.சி.ஐ.ஏ.,’ என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், மும்பை சர்­வ­தேச மத்­தி­யஸ்த மையம் செயல்­படும்.
விரைவில் தீர்வுமும்­பையில், இம்­மையம், அக்., 8ல் திறக்­கப்­பட உள்­ளது. இதன் மூலம், இந்­திய நிறு­வ­னங்கள், உள்­நாட்­டி­லேயே, அவற்றின் பல­த­ரப்­பட்ட வர்த்­தக பிரச்­னை­க­ளுக்கு சுல­ப­மா­கவும், விரை­வா­கவும் தீர்வு காணலாம். மஹா­ராஷ்­டிர அரசு, சர்­வ­தேச வணிக பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணும் மத்­தி­யஸ்த மைய­மாக, இந்­தி­யாவை உரு­வாக்கும் நோக்கில், எம்.சி.ஐ.ஏ.,வை உரு­வாக்கி உள்­ளது. இங்கு, வழக்கு விசா­ர­ணையில், சர்­வ­தேச நடை­முறை கடை­பி­டிக்­கப்­படும் என்­பதால், பன்­னாட்டு நிறு­வ­னங்­களும், பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காண, இம்­மை­யத்தை அணுகும்.
டில்­லியில் உள்ள, இந்­திய மத்­தி­யஸ்த கவுன்சில், மும்­பையின் இந்­திய வர்த்­தக கூட்­ட­மைப்பு மற்றும் சென்னை வர்த்­தகம் மற்றும் தொழில் கூட்­ட­மைப்பு ஆகி­ய­வற்­றிலும், தொழில் தக­ரா­று­களை தீர்த்து வைக்கும் மையங்கள் உள்­ளன; இவை, சர்­வ­தேச வணிகப் பிரச்­னைகள் எதையும், இது­வரை கையா­ள­வில்லை.
ஓராண்டுஇந்­திய நிறு­வ­னங்­களின் பிர­தான தேர்­வாக, சிங்­கப்பூர், லண்டன் மற்றும் ஹாங்காங் மத்­தி­யஸ்த மையங்கள் உள்­ளன. இனி, இந்த நிலை மாறும். எம்.சி.ஐ.ஏ., ‘வீடியோ கான்­ப­ரன்ஸிங்’ உட்பட, நவீன தொழில்­நுட்ப வச­தி­க­ளுடன், விசா­ர­ணையை மேற்­கொள்ளும். அத்­துடன், ஒரு வழக்கின் விசா­ர­ணையை, ஓராண்­டிற்குள் முடித்து தீர்ப்பு வழங்கும். இதற்­காக மத்­திய அரசு, கடந்த ஆண்டு, 1996ம் ஆண்டின், மத்­தி­யஸ்தம் மற்றும் சம­ரச சட்­டத்தில் திருத்தம் செய்­துள்­ளது.
‛இந்­தி­யாவில், மத்­தி­யஸ்த விசா­ர­ணைகள் நியா­ய­மாக நடை­பெ­று­வ­தில்லை என்ற கண்­ணோட்டம், சர்­வ­தேச நிறு­வ­னங்கள் மற்றும் சட்ட வல்­லு­னர்­க­ளுக்கு உள்­ளது. இதை மாற்ற, மும்­பையில், சர்­வ­தேச தரத்தில் அமையும், மத்­தி­யஸ்த மையம் உதவும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)