பதிவு செய்த நாள்
29 செப்2016
01:47

மும்பை : ‘‘பொதுத் துறை வங்கிகளில் காலியாகும் தலைமை பதவிகளுக்கு, உடனடியாக, ஆட்களை நியமிக்க வேண்டும்; தலைவர் இல்லாமல், வங்கிகள் இயங்கக் கூடாது,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்னர், எஸ்.எஸ்.முந்த்ரா, காட்டமாக தெரிவித்து உள்ளார்.
ஓய்வுபொதுத் துறையைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யாவின் பதவிக்காலம், கடந்த, 24ம் தேதியுடன் முடிவடைந்தது; அவருக்கு பதவி நீட்டிப்பு குறித்தோ அல்லது புதிய தலைவர் நியமனம் பற்றியோ, இதுவரை, மத்திய அரசு அறிவிக்காமல் உள்ளது.
இதுகுறித்து நேரடியாக குறிப்பிடாமல், முந்த்ரா, மேலும் பேசியதாவது:அடுத்த சில ஆண்டுகளில், பொதுத் துறை நிறுவனங்களில், ஏராளமான நிர்வாக இயக்குனர்கள், தலைமை செயல் அதிகாரிகள், தலைவர்கள் ஓய்வு பெற உள்ளனர்.பொதுத் துறை வங்கிகளில், ௨௦ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அல்லது தலைமை செயல் அதிகாரி பதவிகள் ஒவ்வொன்றிலும் ஒருவர் நியமிக்கப்படாமல் உள்ளனர். இவர்களில், 8 பேர், அடுத்த ஆண்டும், 10 பேர், 2018ம் ஆண்டும் ஓய்வு பெறுகின்றனர்.
அது போல, வங்கிகளில் இரண்டாம் நிலை பதவிகளில், இந்தாண்டு, 5 பேர்; 2017ல் 7 பேர் ஓய்வு பெறுகின்றனர். 10 பேர், 2018ல்; 12 பேர் 2019ல் ஓய்வு பெற உள்ளனர். பொதுத் துறை வங்கிகளில், 73 சதவீத துணை பொது மேலாளர்கள் மற்றும் பொது மேலாளர்கள், 55 வயதை தாண்டியவர்கள்; 23 சதவீதம் பேர், 50 – 55 வயதினர். இத்தகையோர், ஓய்வு பெறுவதற்கு முன், பதவி உயர்வு பெற வழியில்லை.
ஓட்டுனர் இல்லா கார்அதனால், தலைமை பதவிக்கு ஆட்கள் வருவது, மிகக் குறைவாகவே இருக்கும். ஓட்டுனர் இல்லாமல் ஓடும் கார்களை கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால், தலைமை இல்லாமல் வங்கிகள் இயங்க முடியாது. அதனால், இப்பிரச்னையில், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|