பதிவு செய்த நாள்
29 செப்2016
16:15

மும்பை : பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை இந்திய ராணுவம் அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் காலையில் ஏற்றத்துடன் துவங்கிய போதிலும் , கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. இந்த சரிவு நாள் முழுவதும் நீடித்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 465.28 புள்ளிகள் சரிந்து 27,827.53 புள்ளிகளாகவும், நிப்டி 153.90 புள்ளிகள் சரிந்து 8591.25 புள்ளிகளாகவும் இருந்தது. ஆகஸ்ட் 26ம் தேதிக்கு பிறகு நிப்டி, இன்று முதல்முறையாக 8600 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, லுபின் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|