பதிவு செய்த நாள்
30 செப்2016
00:40

மும்பை:மாண்டலிஸ் இந்தியா, ‘கேட்பரி பியூஸ்’ என்ற புதிய சாக்லேட்டை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, மாண்டலிஸ் இந்தியா நிறுவனத்தின், சாக்லேட் பிரிவு சந்தைப்படுத்துதல் இயக்குனர், பிரசாந்த் பிரேஸ் கூறியதாவது:இந்தியாவில், சாக்லேட் விற்பனையில், எங்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. எனவே, தொடர்ந்து புதிய சுவை உடைய, பல சாக்லேட் வகைகளை அறிமுகம் செய்து வருகிறோம். அந்த வரிசையில், தற்போது, கேட்பரி பியூஸ், என்ற சாக்லேட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது, வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய சுவை உடையதாகஇருக்கும். புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, இந்த சாக்லேட்டின் விலை, 20 ரூபாய் மற்றும், 35 ரூபாய் என்றளவில் உள்ளது. இதை, தற்போது, ஸ்நாப்டீல் இணையதளம் வாயிலாக வாங்கலாம். தொடர்ந்து, ஒரு லட்சம், அங்காடிகளிலும் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|