பதிவு செய்த நாள்
01 அக்2016
00:25

மும்பை:ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை :வங்கிகள், ‘வசதி இருந்தும் கடனை திரும்ப செலுத்தாமல் உள்ளோர்’ என்ற பிரிவில் சேர்க்கப்படும் கடனாளியின் படத்தை மட்டுமே, நாளிதழ்களில் வெளியிட்டு, விளம்பரப்படுத்தலாம்.
இதர கடனாளிகள் அல்லது உத்தரவாதம் அளித்தோரின் படங்களை வெளியிடுவது, ரிசர்வ் வங்கி விதிமுறைக்கு மாறானது. சில நிதி நிறுவனங்கள், கடனாளியின் படத்துடன், அக்கடனுக்கு உத்தரவாதம் அளித்தோரின் படங்களையும், நாளிதழ்களில் வெளியிடுகின்றன. அவ்வாறு வெளியிடக் கூடாது. ‘வசதி இருந்தும் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ளோர்’ என, அறிவிக்கப்பட்டோரின் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும்.
உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டிய இப்பிரச்னையில், நிதி நிறுவனங்கள், பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது. இது தொடர்பாக, நிதி நிறுவனங்கள், இயக்குனர் குழுவைக் கூட்டி, உரிய கொள்கை விதிமுறைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|