பதிவு செய்த நாள்
01 அக்2016
04:41

மான்ட்ரீல்:பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான பிளாக்பெர்ரி, போன்களை பிற நிறுவனங்கள் மூலமாக தயாரித்து அளிக்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.ஸ்மார்ட் போன்களின் முன்னோடியாக கருதப்படும் பிளாக்பெர்ரி, சமீபகாலமாக தடுமாறி வருகிறது. இதையடுத்து, போன் தயாரிப்பை, இந்தோனேஷிய நிறுவனமான, ‘பிடி டைபோன்’ எனும் நிறுவனத்திற்கு வழங்கும் முடிவுக்கு வந்திருக்கிறது.இனி, இந்தோனேஷிய நிறுவனம், பிளாக்பெர்ரி எனும் பெயரில், போன்களை தயாரிக்கும். பிளாக்பெர்ரி போன்களுக்கான மென்பொருள் மற்றும் பழுது நீக்கும் சேவைகளை மட்டும், பிளாக்பெர்ரி செய்யும்.
ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்கு பின், உலகளவில், பிளாக்பெர்ரி போன்களின் விற்பனை கடும் சரிவை சந்தித்தது. இதையடுத்து, மென்பொருள் தயாரிப்பில் மட்டும் ஈடுபடுவது என்றும், இதன் மூலம், முதலீட்டு தேவைகளை குறைத்துக் கொள்ள முடியும் என்றும், பிளாக்பெர்ரி கருதுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|