பதிவு செய்த நாள்
01 அக்2016
04:43

கோல்கட்டா:எல்.ஜி., இந்தியா, ‘பிளாட் டிவி’ விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு, விற்பனையில் உள்ள, எல்.ஜி., இந்தியா நிறுவனம், ‘பிளாட் டிவி’ விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி, நிலாத்ரி தத்தா கூறியதாவது:எங்கள் நிறுவனம், நடப்பு செப்., – நவ., வரையிலான பண்டிகை காலத்தில், 5,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்ய திட்டமிட்டு உள்ளது. தற்போது, உள்நாட்டில், பிளாட் டிவி விற்பனையில், எல்.ஜி., 23 சதவீத சந்தை பங்களிப்புடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. பண்டிகை கால விற்பனையின் மூலம், ‘டிவி’ சந்தையில், எங்கள் நிறுவனம் முதலிடத்துக்கு வரும்.
தற்போது, ‘டிவி’ பேனல்கள் விலை, 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், ‘டிவி’ விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், எங்கள் நிறுவனம், ‘டிவி’ விலையை உயர்த்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|