பதிவு செய்த நாள்
01 அக்2016
04:44

புதுடில்லி:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அரசு துறைகளுக்கு விற்பனை செய்யும் பொருட்களுக்கான தொகை, குறித்த காலத்தில் கிடைப்பதில்லை என, புகார் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தொகையை, சம்பந்தப்பட்ட துறைகள், 45 நாட்களில் வழங்க வேண்டும்.
அவ்வாறு அளிக்காமல் இழுத்தடிக்கும் துறைகள் மீது, புகார் தெரிவிக்க, வர்த்தக வசதி சேவைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள இப்பிரிவை அணுகலாம். வலைதளத்திலும் விண்ணப்பித்து பிரச்னைக்கு தீர்வு காணலாம். விண்ணப்பித்த, 90 நாட்களுக்குள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான தொகையை, தாமத காலத்திற்கான வட்டியுடன் பெற்றுத் தர, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|