பதிவு செய்த நாள்
01 அக்2016
04:47

ஐதராபாத்:‘‘அடுத்த நான்கு ஆண்டுகளில், மின்னணு பொருட்களுக்கான, ‘சாப்ட்வேர் – ஹார்டுவேர்’ வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு துறையில், 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு குவியும்,’’ என, இந்திய மின்னணு மற்றும் செமிகண்டக்டர் கூட்டமைப்பான, ஐ.இ.எஸ்.ஏ., தலைவர், எம்.என்.வித்யாசாகர் தெரிவித்து உள்ளார்.
அவர், மேலும் கூறியதாவது:இந்தியாவில், மின்னணு சாதனங்களை வடிவமைக்கவும், தயாரிக்கவும், பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கி உள்ளன.இத்துறையில், கடந்த இரண்டரைஆண்டுகளில், 1.50 லட்சம் கோடிரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு,மத்திய, மாநில அரசுகள் அனுமதிஅளித்துள்ளன. அடுத்த, 3 – 4 ஆண்டுகளில், இத்துறை, 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடுகளை ஈர்க்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. கிளைகள்அன்னிய முதலீடுகளை திரட்டும் நோக்கில், தைவானில், தைபே மற்றும் ஜப்பானில், புகோகா நகரங்களில், ஐ.இ.எஸ்.ஏ., கிளைஅலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிலும், கிளைகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதனால், இந்தியாவில் மின்னணு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு துறையில், கால்பதிக்க நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், அது தொடர்பான அனைத்து விபரங்களையும், உதவிகளையும், ஐ.இ.எஸ்.ஏ., கிளை அலுவலகங்களில் பெறலாம்.
உள்நாட்டில் அமலாக உள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி, மின்னணு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு துறையை, மேலும் ஊக்குவிக்கும். முதலீடுகளை திரட்டுவதற்கு சலுகைகள் வழங்குவதில், மாநிலங்கள் இடையிலான பாரபட்சமான அணுகுமுறை முடிவுக்கு வரும். நாடு முழுவதும், ஒரே வரி விகிதம் நடைமுறைக்கு வரும் என்பதால், தொழில் செய்ய சாதகமான மாநிலங்களில், நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும். இந்திய வாகனத் துறை, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில், தற்போது, மின்னணு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு துறை உள்ளது.
வளர்ச்சி:கடந்த, 1990களின் மத்தியில், ஜப்பானின் டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் வாகன தயாரிப்பில் இறங்கியது. அதை தொடர்ந்து, ஹோண்டா, வால்வோ என, ஏராளமான நிறுவனங்கள் வந்தன. இதன் மூலம், இந்தியா, சர்வதேச வாகன துறையில், முக்கிய மையமாக உருவெடுத்து உள்ளது. இதே வளர்ச்சியை, மின்னணு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு துறையும் காணும். அதற்கு, வாகனத் துறை போல, 20 ஆண்டுகள் தேவைப்படாது; 10 ஆண்டுகளே போதும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|