பதிவு செய்த நாள்
06 அக்2016
07:28

சென்னை : கிரீம்லைன் டெய்ரி நிறுவனம், ‘என்ரிச் டி’ என்ற, வைட்டமின் டி சத்துடைய, பாலை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, கோபால கிருஷ்ணன் கூறியதாவது: கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் தான், கிரீம்லைன் டெய்ரி. எங்கள் நிறுவனம், ‘ஜெர்சி’ என்ற பெயரில், பால், தயிர், மோர் உள்ளிட்ட, பால் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.எங்கள் நிறுவனத்திற்கு, தினமும், 10 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடைய, ஏழு ஆலைகள் உள்ளன. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில், எங்கள் தயாரிப்புகள் விற்கப்படுகின்றன. தற்போது, ‘என்ரிச் டி’ என்ற பெயரில், வைட்டமின் டி சத்துடைய, பாலை அறிமுகம் செய்துள்ளோம். ஒரு லிட்டர், 40 ரூபாய் என்ற விலையில், சென்னையில் உள்ள கடைகளில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|