பதிவு செய்த நாள்
06 அக்2016
07:28

மும்பை : உரம், ‘இன்சுலேட்டர்’ தொழில்களில் இருந்து, ஆதித்ய பிர்லா குழுமம் வெளியேற திட்டமிட்டுள்ளது.
ஆதித்ய பிர்லா குழுமம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது மொபைல் போன் டவர்களில் குறிப்பிட்ட பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், உரம் மற்றும் இன்சுலேட்டர் தொழில்களில் இருந்தும் வெளியேற திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் குழுமம், ஐடியா செல்லுலார் என்ற பெயரில், தொலைத் தொடர்பு துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான, ஐடியா செல்லுலார் இன்ப்ராஸ்ட்ரக்சர், மொபைல் போன் டவர் வணிகத்தில் உள்ளது. தற்போது, கிராசிம் நிறுவனத்தை இணைக்க, ஆதித்ய பிர்லா முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக, மொபைல் போன் டவரில், சில பங்குகளை விற்பனை செய்யவும், உரம் மற்றும் இன்சுலேட்டர் தொழில்களில் இருந்து வெளியேறவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|