பதிவு செய்த நாள்
06 அக்2016
07:29
புதுடில்லி : நிக்கி – மார்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவின் சேவைகள் துறை வளர்ச்சி, இந்தாண்டு முழுவதும், மிதமான அளவிலேயே உள்ளது. கடந்த செப்டம்பரில், சேவைகள் துறை நிறுவனங்களுக்கு புதிய, ‘ஆர்டர்’கள் குறைந்துள்ளன. இதனால், சேவைகள் துறைக்கான நிக்கி இந்தியா சர்வீசஸ், பி.எம்.ஐ., குறியீடு, 52 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது, ஆகஸ்டில், முந்தைய, 43 மாதங்களில் இல்லாத அளவிற்கு, 54.7 புள்ளிகளாக இருந்தது. இதே காலத்தில், தயாரிப்பு துறை குறியீடு, 54.6 புள்ளிகளில் இருந்து, 52.4 புள்ளிகளாக சரிவடைந்து உள்ளது. இந்தாண்டு, இதுவரை, சேவை மற்றும் தயாரிப்பு துறையில் காணப்படும் மிதமான வளர்ச்சியால், வேலைவாய்ப்பும் குறைவாகவே உள்ளது. எனினும், தற்போது, புதிய ஆர்டர்கள் வருவதற்கான சூழல் உருவாகி உள்ளது. இதனால், சேவை மற்றும் தயாரிப்பு துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|