பதிவு செய்த நாள்
06 அக்2016
07:31

புதுடில்லி : ‘‘அரசு மானியமுடன், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஜவுளி இயந்திரங்களால், உள்நாட்டில், தொழில்நுட்ப ஜவுளி இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன,’’ என, மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி தெரிவித்து உள்ளார்.
டில்லியில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி மையத்தின், பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி உரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது: இந்திய ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு, ஏராளமான ஊக்கச்சலுகைகளை வழங்கி வருகிறது. அது போல, வெளிநாடுகளில் இருந்து, தொழில்நுட்ப ஜவுளி ரகங்களை தயாரிக்கும் பழைய இயந்திரங்களின் இறக்குமதிக்கும், மானியச் சலுகை வழங்கப்படுகிறது. ஜவுளித் துறையை பொறுத்தவரை, மிக அதிகளவிலான மானியம், பழைய இயந்திரங்கள் இறக்குமதிக்கு செல்கிறது. இது, உள்நாட்டில், தொழில்நுட்ப ஜவுளி இயந்திர தயாரிப்பு நிறுவனங்களை பாதிக்கிறது.
ஆதரவளிக்க வேண்டும்அதுமட்டுமின்றி, சாதாரண ஜவுளி அல்லது தொழில்நுட்ப ஜவுளிகளை வடிவமைக்கும் துறையினரும், இதனால் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவிற்கு, சுயசார்பு நாடு என்ற பெருமை உள்ளது. அதை, மேலும் வலுப்படுத்த வேண்டும். உள்நாட்டில், தொழில்நுட்ப ஜவுளி இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள், வடிவமைப்பாளர்கள் ஆகியோருக்கு, இயன்ற வகையில் ஆதரவளிக்க வேண்டும். மத்திய ஜவுளி அமைச்சகம், அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தீவிரமாக கல்வி பயின்று, ஆடை வடிவமைப்பில் பட்டம் பெறும், மாற்றுத்திறனாளிகள் தேவன்ஷி மற்றும் அனில் ஆகியோரின் விடா முயற்சியை பாராட்டுகிறேன்.
மாணவர்கள், புதிய முயற்சிகளில் களமிறங்க வேண்டும்; நவீனமான வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக, ஜவுளியில், கழிவு இல்லாமல், ஆடைகளை வடிவமைக்கும் கலையில், கவனம் செலுத்த வேண்டும். கைத்தறியில் புதுமையான, விதவிதமான ஆடைகளை வடிவமைப்பதில், ஆர்வமுடன் ஈடுபட வேண்டும்.
சிறப்பான எதிர்காலம்தற்போதைய சூழலில், எதிரிகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளும் நவீன ரக, பாதுகாப்பு ஆடைகளுக்கு வரவேற்பு பெருகி வருகிறது. அத்தகைய ஆடைகளை வடிவமைக்கும் மாணவர்களுக்கு, சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. இது போன்ற, புதிய வடிவமைப்புகளை உருவாக்குவதன் மூலம், மாணவர்கள், தங்கள் திறமையை மேலும் வளர்த்து கொள்ள முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|