பதிவு செய்த நாள்
06 அக்2016
17:27

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவை சந்தித்தன. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் எதிரொலியாக நேற்று முன்தினம் பங்குச்சந்தைகள் சற்று உயர்வுடன் இருந்த நிலையில் கடந்த இருதினங்களாக பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் துவங்கியதால் வர்த்தகம் உயர்வுடன் இருந்தன. இருப்பினும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்ததாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 114.77 புள்ளிகள் சரிந்து 28,106.21-ஆகவும், நிப்டி 34.40 புள்ளிகள் சரிந்து 8,709.55-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் சரிந்தும், 8 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|