பதிவு செய்த நாள்
07 அக்2016
07:25

புதுடில்லி : ஹோண்டா – யமஹா நிறுவனங்கள் இணைந்து, சிறிய ஸ்கூட்டர்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹோண்டா, யமஹா ஆகிய நிறுவனங்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்ட, மோட்டார் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, இருசக்கர வாகனங்களுக்கு, குறிப்பாக, ஸ்கூட்டர்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹோண்டா, யமஹா நிறுவனங்கள் இணைந்து, ஜப்பானில், சிறிய வகை ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளன.
தற்போது, ஹோண்டா நிறுவனம், ஜப்பானில், டேக்ட், ஜியோர்னோ என்ற மாடல்களில், 50 சிசி திறனுடைய, ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம், அந்த மாடல்களை, யமஹா நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, யமஹா, ஜோக், வினோ என்ற பெயர்களில், அந்த ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்நிறுவனங்களின் சிறிய வகை ஸ்கூட்டர்கள், குறைந்த எடை கொண்டதாக இருக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|