பதிவு செய்த நாள்
07 அக்2016
07:26

புதுடில்லி : மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இந்தியா – ஜப்பான் இடையே, 2011ல், ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தம், செய்து கொள்ளப்பட்டது. சரக்கு மற்றும் சேவை, அறிவுசார் சொத்துரிமை, அரசு பொருட்கள் கொள்முதல், சுங்க நடைமுறை உள்ளிட்டவற்றில், இரு நாடுகளும் பரஸ்பரம் பயன் பெற இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதை, இந்திய நிறுவனங்கள் முழுவதுமாக பயன்படுத்தி, ஜப்பானுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். ஜப்பான் மருந்து சந்தையில், ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அத்துறையில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் குறைவாக உள்ளது. இதை, அதிகரிக்க வேண்டும். அது போல, தகவல் தொழில்நுட்பத் துறை ஏற்றுமதியும், மிகவும் குறைவாக, 100 கோடி டாலர் என்ற அளவிற்கே உள்ளது. ஆகவே, ஜப்பான் சந்தை வாய்ப்புகளை, இந்திய நிறுவனங்கள், மேலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|