பதிவு செய்த நாள்
07 அக்2016
07:27

நியூயார்க் : இன்டர் பிராண்ட் நிறுவனம், இந்தாண்டுக்கான உலகின் மதிப்புமிக்க, ‘பிராண்டுகள்’ பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதில், கணினி, மொபைல் போன் உள்ளிட்ட சாதனங்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம், முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் பிராண்ட் மதிப்பு, ஓராண்டில், 5 சதவீதம் உயர்ந்து, 17,800 கோடி டாலராக, அதாவது, 11 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இரண்டாவது இடத்தை பிடித்துள்ள, கூகுள் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு, 11 சதவீதம் உயர்ந்து, 8.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
பிராண்ட் மதிப்பில், முதல், 10 இடங்களை பிடித்த நிறுவனங்களில், கோக கோலா, மைக்ரோசாப்ட், டொயோட்டா மோட்டார், ஐ.பி.எம்., சாம்சங், அமேசான், மெர்சிடஸ் பென்ஸ், ஜெனரல் எலக்ட்ரிக் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒரு நிறுவனத்தின் நிதிச் செயல்பாடுகள், நுகர்வோரிடம் ஏற்படுத்தும் தாக்கம், விற்பனை உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில், பிராண்ட் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|