பதிவு செய்த நாள்
07 அக்2016
07:27

புதுடில்லி : பிளாபங்க்ட் நிறுவனம், இந்தியாவில், மொபைல் போன், ஸ்மார்ட் வாட்சுகளை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, பிளாபங்க்ட் நிறுவனம், மொபைல் போன் உள்ளிட்ட, மின் சாதனங்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், முதன்முறையாக, இந்திய சந்தையில், மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றின் விற்பனையில், அடுத்த ஆண்டில் களமிறங்க திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், ஆன்ட்ரெஜ் செப்ராட் கூறியதாவது: எங்கள் நிறுவவனம், 300 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையிலான, மொபைல் போன், ‘சார்ஜர் கேபிள், பவர் பேங்க்’ உள்ளிட்ட, உபகரணங்களை அறிமுகம் செய்துள்ளது. நடப்பாண்டில், இந்திய சந்தையில், மொபைல் போனுக்கு பயன்படும் உபகரணங்களை, விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளோம். அடுத்த ஆண்டின், இரண்டாவது காலாண்டில், மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|