பதிவு செய்த நாள்
07 அக்2016
07:28

புதுடில்லி : ‘ஜவுளித் துறையை ஊக்குவிக்க, ஏராளமான சலுகைகள் அளித்துள்ள போதிலும், அத்துறையில், அன்னிய முதலீடு திருப்திகரமாக இல்லை’ என, மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதன் விபரம்: போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது; தொழில் சார்ந்த சில கட்டுப்பாடுகள், முக்கிய நாடுகளுடன், வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாதது போன்றவற்றால், ஜவுளித் துறை, அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின்தங்கி உள்ளது. ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில், வங்க தேசம், வியட்நாம், துருக்கி,கம்போடியா, பாக்., உள்ளிட்டநாடுகள் முன்னணியில் உள்ளன.இவை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், 10 – 30 சதவீதம் வரை, வரிச்சலுகை பெறுவதால், இந்தியாவை விட, அதிகளவில் ஜவுளி ஏற்றுமதியை மேற்கொள்கின்றன.
இந்திய ஜவுளித் துறையில், பெண் பணியாளர்களின் பங்கு பெரும்பான்மையாக உள்ளது. ஆனால், இரவு நேரங்களில், பெண்கள் பணியாற்ற, தொழிலாளர் நலச் சட்டத்தில் இடமில்லை என்பதால், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கடந்த, 2000 – 2015ம் நிதியாண்டுகள் வரை, இந்திய ஜவுளித் துறையில், 150 கோடி டாலர் அளவிற்கே, அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது; இதில், 46 கோடி டாலர் முதலீட்டுடன், ஆப்ரிக்கா முதல் இடத்தில் உள்ளது. ஆப்ரிக்காவின் முதலீட்டில், மொரீஷியஸ் நாட்டின் பங்களிப்பு, 99 சதவீதமாக உள்ளது.
இந்திய ஜவுளித் துறையில் அன்னிய நேரடி முதலீட்டில், பெல்ஜியம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்த இடங் களில், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|