பதிவு செய்த நாள்
07 அக்2016
07:28

புதுடில்லி : ‘இந்தியாவில், ரொக்கப் பரிவர்த்தனைகள் குறைந்து, ‘டிஜிட்டல்’ வழியிலான பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 70 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்’ என, விசா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம்: மக்கள் தொகை அதிகமுள்ள இந்தியாவில், ரொக்கப் பரிவர்த்தனை பிரதானமாக உள்ளது. கணினி, மொபைல் போன், ‘கிரெடிட், டெபிட் கார்டு’ போன்றவை வாயிலாக, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் குறைவாக உள்ளன.
சலுகைகள்ரொக்கப் பரிவர்த்தனையால், நேரம், மனித உழைப்பு உள்ளிட்டவை வீணாகின்றன. மேலும், நிதியை கையாள்வது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, அதிகம் செலவிட வேண்டியுள்ளது. கடந்த, 2014 – 15ம் நிதியாண்டு நிலவரப்படி, இந்திய குடும்பங்கள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகிய நான்கு பிரிவுகளில், ரொக்கப் பரிவர்த்தனை செலவினம், நாட்டின் பொருளாதாரத்தில், 1.7 சதவீதமாக உள்ளது.
ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் முறையிலான பணப் பரிமாற்றங்களை ஊக்குவிக்க, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளன; அவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில், டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரிக்கும். இதன் மூலம், டெபிட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஏற்கும், 13 லட்சம் விற்பனை மையங்களின் எண்ணிக்கை, மூன்று மடங்கு அதிகரித்து, 40 லட்சமாக உயரும்; 4 கோடி குடும்பங்கள், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறும்.
இத்துடன், மேலும் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்கலாம். குறிப்பாக, டிஜிட்டல் முறையில் நிதியை நிர்வகிக்கும் நுகர்வோருக்கும், வணிகர்களுக்கும் சலுகைகள் வழங்கலாம்.
மாற்றங்கள்புதிய சட்ட, திட்டங்களை அறிமுகப்படுத்தலாம்; அரசு துறை சார்ந்த, அனைத்து ரொக்கப் பரிவர்த்தனைகளையும், டிஜிட்டல் முறைக்கு மாற்றலாம்; புதிய தொழில்நுட்பங்களை புகுத்தலாம்; மாநிலங்கள் இடையிலான ரொக்கப் பரிமாற்றங்களை குறைப்பது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அரசுகள், கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். இது போன்ற நடவடிக்கைகள் மூலம், இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிக்கும். இதன் வாயிலாக, இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரொக்கப் பரிவர்த்தனை செலவில், 1,040 கோடி டாலர், அதாவது, 70 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|