பதிவு செய்த நாள்
07 அக்2016
12:49

சென்னை : தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு, 350 கோடி ரூபாய் கூடுதல் கடன் வழங்க, தொழில் முதலீட்டுக் கழகம் முடிவெடுத்து உள்ளது. 'டிக்' என்ற, அரசு தொழில் முதலீட்டுக் கழகம், சிறு தொழில் நிறுவனங்களுக்கு, கடனுதவி வழங்கி, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த நிறுவனத்தில் கடன் வாங்கிய, சிறு தொழில் நிறுவனத்தினர், முறையாக கடனை திருப்பிச் செலுத்துகின்றனர். இதனால், இந்த ஆண்டு கூடுதலாக, 350 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது.இதுகுறித்து, 'டிக்' அதிகாரிகள் கூறியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தான், அதிகளவில் கடன் வழங்கப்படுகிறது. 13 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறோம். கடந்த நிதி ஆண்டில், 1,450 கோடி வழங்க திட்டமிட்டோம்; 1,250 கோடி ரூபாய் வழங்கினோம். அதில், 90 சதவீதத்திற்கு அதிகமாக, தொழில் நிறுவனத்தினர் திருப்பி செலுத்தியுள்ளனர். எனவே, இந்த நிதி ஆண்டில் கூடுதலாக, 350 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டு, இதுவரை, 600 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|