பதிவு செய்த நாள்
08 அக்2016
07:22

புதுடில்லி : கடந்த செப்., மாதத்தில், உள்நாட்டில், 1.95 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளன. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 1.69 லட்சம் கார்களாக குறைந்திருந்தன. இதே காலத்தில், மொத்த பயணிகள் வாகனங்கள் விற்பனை, 19.92 சதவீதம் உயர்ந்து, 2.32 லட்சத்தில் இருந்து, 2.78 லட்சமாக அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிள் விற்பனை, 16.33 சதவீதம் உயர்ந்து, 10.20 லட்சத்தில் இருந்து, 11.86 லட்சமாக உயர்ந்துள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை, 21.59 சதவீதம் அதிகரித்து, 15.37 லட்சத்தில் இருந்து, 18.68 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 1.95 சதவீதம் குறைந்து, 62,845 என்ற எண்ணிக்கையில் இருந்து, 61,621 ஆக சரிவடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த மாதத்தில், அனைத்து வகை வாகனங்களின் விற்பனை, 22.60 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 18.81 லட்சமாக குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|