வாழை, மாது­ளையை சீனா­வுக்கு அனுப்­புங்கள்: மத்­திய அரசுவாழை, மாது­ளையை சீனா­வுக்கு அனுப்­புங்கள்: மத்­திய அரசு ... இணை­யத்தில் வாங்கி குவிக்கும் இந்­தி­யர்கள் :பண்­டிகை கால விற்­பனை இணை­யத்தில் வாங்கி குவிக்கும் இந்­தி­யர்கள் :பண்­டிகை கால விற்­பனை ...
இந்­தி­யாவின் நிர்­வாக சீர்­தி­ருத்­தங்­களால் வணிக முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2016
07:28

வாஷிங்டன் : ‘இந்­தி­யாவில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும், பல்­வேறு சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள், வணிகத் துறையில், முத­லீ­டு­களை அதி­க­ரிக்க துணை புரியும்’ என, பன்­னாட்டு நிதியம் மதிப்­பீடு செய்­துள்­ளது.
ஆசிய – பசிபிக் பிராந்­திய நாடு­களின், பொரு­ளா­தார வளர்ச்சி குறித்த ஆய்­வ­றிக்­கையை, பன்­னாட்டு நிதியம் வெளி­யிட்டு உள்­ளது. அதன் விபரம்: இந்­தாண்டு, இந்­தி­யாவில், மிக வலி­மை­யான சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளன. குறிப்­பாக, அம­லுக்கு வர உள்ள, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், அடுத்த சில ஆண்­டு­களில், இந்­தியா மிகச்­சி­றந்த வளர்ச்சி காண உதவும். புதிய வேலை­வாய்ப்­புகள் உரு­வா­வ­தற்கு ஏற்ப, நாட்டில், போதிய அள­விற்கு தொழில் வல்­லு­னர்கள் பெருக வேண்டும். பொருட்கள் சந்­தையின் வளர்ச்­சிக்கு, போட்­டியும் அவ­சியம். இந்­தி­யாவின் சீர்­தி­ருத்த திட்­டங்­களால், இத்­த­கைய சூழல் உரு­வாகி உள்­ளது.
தனியார் துறைஇந்­தியா, இந்­தோ­னே­ஷியா உள்­ளிட்ட சில ஆசிய நாடு­களில், பணி­யாற்றும் தகு­தி­யுள்ளோர் எண்­ணிக்கை, தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. இது, அந்­நா­டு­களின் வளர்ச்­சியை, நிலை­யாக தக்­க­வைத்துக் கொள்ள உதவும். இந்­தி­யாவின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், 7.6 சத­வீதம்; 2017 – 18ல், 7.7 சத­வீதம் என்­ற­ளவில் உயரும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது. தனியார் துறையில், பெருகி வரும் தேவையும், அதி­க­ரித்து வரும் பயன்­பாடும், நாட்டின் வளர்ச்­சிக்கு துணை புரியும். போது­மான அள­விற்கு பெய்­துள்ள பரு­வ­ம­ழையால், விவ­சாயம் சிறக்கும். மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதிய உயர்வு, தேவையை அதி­க­ரிக்கச் செய்யும்.
இந்­தி­யாவில், தனியார் முத­லீ­டுகள் சூடு­பி­டிக்க துவங்­கி­யுள்­ளன. பர­வ­லான நிதிச் சேவைகள், மக்­களை சென்­ற­டைந்து வரு­கின்­றன. அதற்கு வலு­சேர்க்கும் வித­மாக, பார­பட்­ச­மற்ற நிதிக் கொள்­கைகள் அமைந்­துள்­ளன. சரக்கு மற்றும் சேவை வரியில் காட்­டிய தீவிரம்; பண­வீக்­கத்தை கட்­டுப்­ப­டுத்த எடுத்த நட­வ­டிக்­கைகள்; அன்­னிய நேரடி முத­லீ­டு­களில் கட்­டுப்­பா­டு­களை நீக்­கி­யது போன்ற சீர்­தி­ருத்­தங்­களை, இந்­திய அரசு தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கி­றது.
நம்பிக்கைஇது போன்ற கார­ணங்­களால், இந்­தி­யாவின் நடுத்­தர கால வளர்ச்சி, முந்தைய மதிப்­பீட்­டை விட, கூடு­த­லாக இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வணிக நடை­மு­றை­களில் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்றம்; தொழில்­க­ளுக்கு ஆத­ர­வான அரசின் கொள்­கைகள்; தேவைக்கும், அளிப்­பிற்கும் உள்ள இடை­வெ­ளியை குறைக்க எடுத்த நட­வ­டிக்­கைகள் போன்­ற­வற்றால், இந்­தியா மீது, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு நம்­பிக்கை அதி­க­ரித்து உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)