பதிவு செய்த நாள்
10 அக்2016
04:36

காப்பீடு ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பெற்றுக்கொள்ளும் இ–இன்சூரன்ஸ் கணக்கு வசதியை இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ., கட்டாயமாக்கியுள்ளது. இதன் படி அக்டோபர், 1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் பாலிசி வாங்குபவர்கள், இ–இன்சூரன்ஸ் கணக்கு வைத்திருப்பது அவசியம்.
காப்பீடு பாலிசிகளை ஒரே இடத்தில் டிஜிட்டல் வடிவில் பராமரித்து அணுக வழி செய்யும் இந்த வசதி சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானாலும், இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு உட்பட அனைத்து வகையான பாலிசிகளுக்கும் இது பொருந்தும். ஆண்டு பிரீமியம் தொகை, 10,000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அல்லது சம் அஷ்யூர்டு தொகை, 5 முதல், 10 லட்சம் ரூபாயாக இருந்தால், பாலிசிகளை இ–இன்சூரன்ஸ் கணக்கு இருந்தால் மட்டுமே பெறமுடியும்.
பலவித வசதிகள்இந்த முறையில் பலவித வசதிகள் இருக்கின்றன. எல்லா பாலிசிகளையும் ஒரே இடத்தில் அணுகலாம் என்பதோடு எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாலிசிகள் தொலைந்து விடும் என்ற கவலை இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும். மாற்றங்களை எளிதாக மேற்கொள்ளலாம். கே.ஒய்.சி., நடைமுறையும் எளிதானது. பாலிசிதாரர் காப்பீடு நிறுவன கிளைக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.
எப்படி துவக்குவது?இ–இன்சூரன்ஸ் கணக்கு துவக்கும் நடைமுறை எளிதானது. காப்பீடு நிறுவனம் மூலம் அல்லது இதற்கென நியமிக்கப்பட்டுள்ள ரெபாசிட்டரி மூலம் கணக்கை துவக்கி கொள்ளலாம். இதற்கு தனியே கட்டணம் கிடையாது. முதலில் ஐ.ஆர்.டி.ஏ., நியமித்துள்ள ஐந்து ரெபாசிட்டரி சேவைகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த நிறுவன இணையதளத்திற்கு விஜயம் செய்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். கே.ஒய்.சி., ஆவணம், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு விபரங்களை சமர்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் பற்றிய விபரங்களை இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். இதற்கென நியமிக்கப்பட்டுள்ள அங்கீ கரிக்கப்பட்ட நபர்களிடமும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். பின்னர் ரெபாசிட்டரி நிறுவனம் இவற்றை சரி பார்த்து கணக்கை துவக்கும். கணக்கு துவக்கப்பட்ட பின், 13 இலக்க கணக்கு எண் வழங்கப்படும். அதை இயக்குவதற்கான பயனர் பெயர் மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும்.
பாலிசி வாங்குவதுஇ–இன்சூரன்ஸ் கணக்கு துவக்கிய பின், புதிதாக பாலிசி வாங்கும் போது இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உங்கள் கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் கணக்கு துவக்கியிருந்தால் பாலிசி வாங்குவது தொடர்பான நடைமுறைகளை நிறுவனமே கவனித்துக்கொள்ளும். கணக்கு துவக்கிய பின் புதிய பாலிசி டிஜிட்டல் வடிவில் அதில் இருக்கும். பழைய பாலிசிகளையும் முறையாக விண்ணப்பித்து டிஜிட்டல் வடிவில் மாற்றிக்கொள்ளலாம். எல்லா பாலிசிகளை யும் ஒரே இடத்தில் அணுகலாம். இதன் மூலமே பிரீமியம் செலுத்தலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|