பதிவு செய்த நாள்
10 அக்2016
04:38

உங்கள் வாழ்க்கை வளமாக இருக்க வேண்டும் என்றால், அதிக வருவாய் இருந்தால் மட்டும் போதாது, உங்களுக்கு என்று தெளிவான நிதி திட்டமும் இருக்க வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களில் துவங்கி, பிள்ளைகளின் உயர் கல்வி, ஓய்வு கால வாழ்க்கை என எல்லாவற்றுக்கும் தெளிவான நிதி திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். அதனால் தான் தனி நபர் நிதியில் நிதி திட்டமிடல் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இலக்குகள்நிதி திட்டமிடல் என்பது நிதி இலக்குகளை தீர்மானிப்பதில் இருந்து துவங்குகிறது. உயர் கல்விக்கு சேமிப்பது, வீட்டுக்கடனை அளிப்பது, வெளிநாட்டு விடுமுறை, புதிய கார் வாங்குவது, பிள்ளைகள் திருமணம், வீட்டை புதுப்பிப்பது, தனியே தொழில் துவங்குவது என நிதி இலக்குகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இவற்றை அடைவது எப்படி என தீர்மானிக்கும் முன், இவற்றில் முக்கியமானவை எவை என முடிவு செய்து கொள்வது அவசியம்.
ஏன்?பலவித நிதி இலக்குகள் இருக்கலாம். ஆனால், வருமானமும், செலவுகளும் தான் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் சாத்தியத்தை தீர்மானிக்கின்றன. எனவே, இலக்குகளில் எவை முக்கியம் என்பதை தீர்மானிக்க வேண்டும். இதற்காக எல்லா இலக்குகளையும் எழுதி வைக்க வேண்டும். அதன் பிறகு, ஒவ்வொரு இலக்கையும் அடைய விரும்புவது ஏன், அதற்கான துாண்டுகோள் என்ன ஆகிய கேள்விகளை எழுப்பி, இலக்குகளை புரிந்து கொள்ள வேண்டும்.
எதற்காக?நிதி இலக்குகளை அடைய விரும்புவதற்கான காரணங்களை தெளிவாக புரிந்து கொண்டதும், அடுத்ததாக அவற்றை நிறைவேற்றிக் கொள்வதால் ஏற்படக்கூடிய பலன்கள் அல்லது அவற்றை அடையாமல் போவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி யோசிக்க வேண்டும். இந்த அம்சங்கள் நம்முடைய இலக்குகளில் மிகவும் முக்கியமானவை எவை என்பதை தீர்மானிக்க உதவும்.
வழிகள்இனி இலக்குகளை அடைய என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். இதற்காக இலக்குகளை நான்கு பகுதிகளாக வகைப்படுத்தி பிரித்துக்கொள்ள வேண்டும். ஒரே பிரிவின் கீழ் பல இலக்குகள் இருந்தால் அவற்றை வரிசைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு சில இலக்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளிலும் வரலாம். இவற்றுக்கு ஏற்ப நிதியை ஒதுக்கி சேமிப்பு அல்லது முதலீட்டை திட்டமிட வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|