பதிவு செய்த நாள்
10 அக்2016
04:43

சண்டிகர் : ஐடெல் மொபைல், சந்தை பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுதிர் குமார் கூறியதாவது: எங்கள் நிறுவனம், ஆண்டுதோறும், 25 கோடி மொபைல் போன்கள் விற்பனை செய்கிறது. இதில், 1.50 கோடி போன்கள், 8,000 ரூபாய்க்கு கீழ் உள்ளவை. அடுத்த ஆண்டில், மாதம்தோறும், 30 லட்சம் போன்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. உள்ளூர் நிறுவனத்துடன் இணைந்து, மொபைல் போன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உள்ளோம். அங்கு, உற்பத்தியாகும் போன்கள், ஆப்ரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படும். தற்போது, இந்திய மொபைல் போன் சந்தையில், எங்கள் நிறுவனத்தின் பங்கு, 2 – 3 சதவீதம் என்றளவில் உள்ளது. அடுத்த ஆண்டில், 8,000 ரூபாய்க்கு கீழ் உள்ள போன்களை அதிகளவில் விற்பனை செய்ய உள்ளோம். இதன் மூலம், எங்கள் நிறுவனத்தின் சந்தை பங்கு, 20 சதவீதமாக உயரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|