பதிவு செய்த நாள்
10 அக்2016
04:43

ஐதாராபாத் : வெர்மிரென் நிறுவனம், ஸ்ரீ சிட்டி தொழிற்சாலையில், உற்பத்தியை துவக்கியுள்ளது.
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வெர்மிரென், வீல்சேர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஆந்திர மாநிலம், ஸ்ரீ சிட்டியில், தொழிற்சாலை அமைக்கும் பணியை, 2015 ஏப்., மாதம் துவக்கியது. இந்நிலையில், தற்போது, அந்த ஆலையில் உற்பத்தி துவங்கியுள்ளது.
இதுகுறித்து, வெர்மிரென் குழும நிர்வாக இயக்குனர் பேட்ரிக் வெர்மிரென் கூறியதாவது: ஸ்ரீ சிட்டியில், 40 கோடி ரூபாய் முதலீட்டில், 75 ஆயிரம் சதுர அடியில், தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆலையில், முதல் கட்டமாக, 14 ஆயிரம் வீல் சேர்கள் உற்பத்தி செய்யப்படும். பின், படிப்படியாக, ஒரு லட்சம் வீல்சேர், 25 ஆயிரம் படுக்கைகள் உற்பத்தி செய்யப்படும். இந்த ஆலையின் மூலம், 300 பேருக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|