பதிவு செய்த நாள்
10 அக்2016
04:45

பெங்களூரு : இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்குகளில், ‘நந்தினி’ பாலகங்கள் துவக்கப்பட உள்ளன.
கர்நாடக பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு, ‘நந்தினி’ என்ற பெயரில், பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கூட்டமைப்பு, அண்மையில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்குகளில், நந்தினி பால் பொருட்கள் விற்பனை செய்ய இருக்கிறது.
இதுகுறித்து, கர்நாடகா பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், அதிகளவில் பெட்ரோல் பங்க்குகளை வைத்துள்ளது. நடப்பாண்டில் கூட, அந்நிறுவனம், 900 பெட்ரோல் பங்க்குளை புதிதாக துவக்க உள்ளது. எனவே அந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்குகளில், நந்தினி பாலகங்கள் துவக்குவதன் மூலம், அதிகளவில் பால் பொருட்களை விற்பனை செய்ய இயலும் என கருதுகிறோம். அதன் தொடர்ச்சியாகவே அதனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|